Agora மாநாட்டில் பங்குபெறுவது

 

 

ஜார்ஜ் டயஸ், போர்ச்சுகல் நாட்டின் Agora Speakers தூதர் மற்றும் 2019 ஆம் ஆண்டு லிஸ்பனில் நடைபெற்ற முதல் Agora மாநாட்டின் ஏற்பாட்டாளர்
ஜார்ஜ் டயஸ், போர்ச்சுகல் நாட்டின் Agora Speakers தூதர் மற்றும் 2019 ஆம் ஆண்டு லிஸ்பனில் நடைபெற்ற முதல் Agora மாநாட்டின் ஏற்பாட்டாளர்

 

Agora சர்வதேச மாநாடுகள் (பொதுவாக "AgoraCon" என்று அழைக்கப்படுகின்றன) என்பது பல நாள் நடக்கும் நிகழ்ச்சிகள் ஆகும், இது உலகம் முழுவதிலுமிருக்கும் உறுப்பினர்கள் போட்டி, கற்றல், சமூகமயமாக்கல் மற்றும் Agora-வின் எதிர்காலத்தை பட்டியலிடுதல் போன்ற விஷயங்களுக்கு ஒன்றுக்கூடுகின்றனர். இவர்கள் Agora, அதன் குறிக்கோள் மற்றும் அதன் நோக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தாலும், இவை அனைத்து நபர்களும் கலந்து கொள்ளக்கூடிய வெளிப்படையான நிகழ்ச்சிகள். இவற்றின் கலந்துக் கொள்வதற்கு Agora-வில் உறுப்பினராக இருக்க வேண்டிய தேவை இல்லை. மிகைப்படுத்திக் கூறவில்லை, Agora மாநாட்டில் கலந்துகொள்வது என்பது வாழ்க்கையை மாற்றும் நிகழ்ச்சியாகும். நீங்கள் சந்திக்கும் நபர்களின் எண்ணிக்கை, ஒன்றாக அதிக நேரம் செலவழிக்கும் மக்களிடையே உங்களுக்கு ஏற்படும் பரஸ்பர நம்பிக்கை, நட்பு மற்றும் அரவணைப்பின் அளவு, நீங்கள் பெறும் அறிவு மற்றும் நீங்கள் ஏற்படுத்திக்கொள்ளும் தொடர்புகள் பல ஆண்டுகளுக்கு எதிரொலிக்கும்.

Agora மாநாடு ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட லோகோ மற்றும் தீம் இருக்கும். உதாரணமாக, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் மாநாடு "பெரிதாக கனவு கண்டு, அதை நிஜமாக்குங்கள்" என்ற தீமை கொண்டிருந்தது. இரண்டாவது மாநாடு (கோவிட் 19 தொற்றுநோய் காரணமாக, 2020 ஆம் ஆண்டு நடைபெற வேண்டியிருந்த மாநாடு 2021 க்கு ஒத்திவைக்கப்பட வேண்டியிருந்தது) "புதிய காலத்திற்கு ஏற்ற புதிய தலைவர்கள்" என்ற தீமை கொண்டிருந்தது.

Banner

 

Agora மாநாடுகள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றன, வழக்கமாக Agora தோன்றிய நாளுக்கு (பிறந்தநாளுக்கு - அருகில் - ஆகஸ்ட் 21 கொண்டாடப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மாநாட்டை நடத்த வெவ்வேறு நகரம் மற்றும் நாடு தேர்ந்தெடுக்கப்படுகிறது. தேர்வானது பல அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டது:

  • இப்பகுதியில் கிளப்புகளின் வளர்ச்சி.
  • போதுமான ஆதரவு உள்கட்டமைப்பு வசதி இருப்பது (போக்குவரத்து மையங்கள், ஹோட்டல்கள் போன்ற வசதிகள் இருப்பது).
  • அமைவிடத்தின் அணுகல் - அரசியல் (நாட்டின் நுழைவு தேவைகளின் அடிப்படையில்) மற்றும் நடைமுறை (பாதுகாப்பு, அணுகல் முதலியவற்றின் அடிப்படையில்) ரீதியான அணுகல்.
  • இந்த அளவிலான ஒரு நிகழ்ச்சியை வெற்றிகரமாக ஏற்பாடு செய்வதற்கான அமைப்பாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் திறன்.
  • முன்பு மாநாடுகள் நடைபெற்ற இடம் (உதாரணமாக, கடந்த மாநாடு மேற்கு ஐரோப்பாவில் நடந்திருந்தால், மேற்கு ஐரோப்பா அல்லது ஐரோப்பா அடுத்த மாநாட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பில்லை).

மற்ற செயல்பாடுகளைப் போலல்லாமல், ஒரு மாநாட்டில் கலந்து கொள்வது இலவசமானது அல்ல, இதற்கான டிக்கெட்டிற்கு கட்டணம் செலுத்த வேண்டும். டிக்கெட் விலையானது அரங்கத்தை வாடகைக்கு எடுப்பது, கேட்டரிங் ஏற்பாடு செய்வது, அனைத்து உள்கட்டமைப்பு செலவுகள் (உபகரணங்கள், விளக்குகள், தளபாடங்கள்), நுகர்பொருட்கள், புகைப்படம் எடுத்தல் மற்றும் வீடியோ பதிவு போன்ற தொழில்முறை சேவைகள் மற்றும் சில முக்கிய விருந்தினர்கள் அல்லது முக்கிய பேச்சாளர்களுக்கான செலவுகளுக்கு கட்டணம் செலுத்துவது போன்றவற்றுக்கு செலவழிக்கப்படும்.

 

செயல்பாடுகள்

மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் மாநாட்டின் போது நடைபெறும் செயல்பாடுகளை தீர்மானிப்பதில் நிறைய இலகுத்தன்மையைக் கொண்டுள்ளனர், அதனால்தான் இரண்டு மாநாடுகளும் சமமானதாக இருப்பதில்லை.

மையப்பகுதியாக, ஒவ்வொரு மாநாட்டிலும் முக்கிய மாநாட்டு மண்டபத்தில் ஒரு "முக்கிய டிராக்" நிகழ்வு இடம்பெறும், அவை:

  • ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முக்கிய சொற்பொழிவுகள்
  • இறுதிப் போட்டிகள் 
  • ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பயிற்சிபட்டறைகள்
  • காலா இரவு உணவு
  • பொழுதுபோக்கு நிகழ்ச்சி
  • நெட்வொர்க்கிங் நிகழ்ச்சி
  • விருது வழங்கும் விழா - போட்டியின் வெற்றியாளர்கள் மற்றும் பிற புகழ்பெற்ற உறுப்பினர்களுக்கு

கூடுதலாக, தனி அறைகளில் "துணை நிகழ்ச்சிகள்" நடைபெறலாம், இதில் பயிற்சிபட்டறைகள், பயிற்சி அமர்வுகள் அல்லது பிற நிகழ்ச்சிகள் அரங்கேறும்.

லிஸ்பன் 2019 மாநாட்டின் போது பங்கேற்ற செயல்பாடுகளின் ஒரு சிறிய உதாரணம் இதோ இங்கே (முழு தெளிவுத்திறனுடன் படத்தைக் காண ஒவ்வொரு படத்தையும் கிளிக் செய்யவும்).

71332100 2726353410730275 8014999291821031424 N

  71842786 2726398267392456 8927218322215272448 N

Convention 10

  Convention

Convention10 Convention28 Convention27 Convention 1

 

சட்ட ரீதியான விஷயங்கள்

 

ஒரு மாநாட்டில் கலந்து கொள்ளத் திட்டமிடுவதற்கு முன், உங்களுக்கு விசா தேவையா இல்லையா, ஆம் என்றால், நீங்கள் என்ன ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பதை மாநாட்டை நடத்தும் நாட்டின் தூதரகத்திடம் சரிபார்க்கவும்.

நீங்கள் செல்ல முடிவு செய்தவுடன், விசா கோரிக்கையை தாமதப்படுத்தாதீர்கள் - சில நாடுகள் விசா வழங்க இரண்டு மாதங்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.

விசாவுக்கான ஆதரவு கடிதங்கள்

 

Schengen

ஐரோப்பிய யூனியனில் நடக்கும் ஒரு மாநாட்டு நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பும், தங்கள் நாட்டில் விசா செயல்முறைக்கு Agora-விலிருந்து அதிகாரப்பூர்வ அழைப்புக் கடிதம் தேவைப்படும் எவரும், தயவுசெய்து மாநாட்டு டிக்கெட் ரசீது மற்றும் உங்கள் முழு விவரங்களை (உங்கள் பாஸ்போர்ட்டில் உள்ளவாறு முழு பெயர் மற்றும் உங்கள் அஞ்சல் முகவரி) info at agoraspeakers.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், நாங்கள் ஒரு வணிக நாளுக்குள் அழைப்புக் கடிதத்தை உங்களுக்கு அனுப்பி வைப்போம். இந்த கடிதத்தை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ளாதது ஒவ்வொரு தூதரகத்தைப் பொறுத்தது என்பதை நினைவில் கொள்க, மேலும் எங்களுக்கு அதில் எந்த செல்வாக்கும் இல்லை.

நீங்கள் சட்டப்பூர்வ காரணங்களுக்காக முழுமையாக பதிவுசெய்து மாநாட்டிற்கு பணம் செலுத்தியவுடன் மட்டுமே நாங்கள் விசா ஆதரவு கடிதங்களை வழங்க முடியும்.

ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கான விசாக்கள் அந்த நாட்டிற்கு வெளியில் இருக்கும்போதே பெற்றிட வேண்டும் (மற்றும் ஷெங்கன் பகுதியில் உள்ள எந்த நாடுகளுக்குமான விசாக்கள் அந்தப் பகுதிக்கு வெளியில் இருக்கும்போதே பெற்றிட வேண்டும்). மேற்கண்ட கடிதத்தை அனுப்புவதைத் தவிர, நாங்கள் எந்த விதத்திலும் விசா செயல்முறையில் செல்வாக்கு செலுத்தவோ, அதனைக் கட்டுப்படுத்தவோ இயலாது, அல்லது ஒரு குறிப்பிட்ட விண்ணப்பத்தின் நிலை அல்லது தேவையான ஆவணங்கள் பற்றிய தகவலை எங்களால் வழங்க இயலாது.

மேலும், எங்களது ஃபவுண்டேஷன் உடைய அனைத்து சட்ட விவரங்களையும் இங்கே காணலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Agora Speakers International ஐரோப்பிய யூனியனில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்க. எங்கள் ஆதரவு கடிதங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் நாடுகளின் தூதரகங்களில் ஏற்றுக்கொள்ளப்படலாம், ஆனால் வேறு எங்கும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்ற அவசியமில்லை.

விலைப்பட்டியல்

உங்கள் டிக்கெட்டுக்கான விலைப்பட்டியலைப் பெற, தயவுசெய்து மாநாட்டு ஏற்பாட்டாளரைத் தொடர்பு கொள்ளவும்.

 


Contributors to this page: agora and shahul.hamid.nachiyar .
Page last modified on Wednesday November 10, 2021 15:05:08 CET by agora.